இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 452 பேர் கைது


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 452 பேர் கைது
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 452 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்


தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய மறியல் நடத்த மாநில தலைமை அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகரில் தேசபந்துதிடலில் உள்ள தபால் நிலையம் முன்பு விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், தேசியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர்கள் பாலமுருகன், செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பழனி குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக 240 பெண்கள் உள்பட 452 பேர் கைது செய்யப் பட்டனர்.


Related Tags :
Next Story