சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே திற்பரப்பில் 45.4 மில்லி மீட்டர் மழை பதிவு


சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே திற்பரப்பில் 45.4 மில்லி மீட்டர் மழை பதிவு
x

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே திற்பரப்பில் 45.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே திற்பரப்பில் 45.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மழை பதிவு

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காலையில் அதிகமாக இருந்தாலும், மதியத்திற்கு பிறகு ஆங்காங்கே லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் இரவில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. அதே சமயம் மலையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீர் அளவும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 8 மணியுடன் 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்தின் சில பகுதிகளில் பெய்த மழையின் அளவு விவரம்:

பேச்சிப்பாறை- 28.6, பெருஞ்சாணி- 5.4, சிற்றார் 1- 19.4, சிற்றார் 2- 27.4, புத்தன் அணை- 5 என பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக திற்பரப்பு பகுதியில் 45.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 172 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 29 கனஅடி தண்ணீரும் வந்தது.


Next Story