மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 457 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 457 மனுக்கள் பெறப்பட்டன
x

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 457 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, ஏரி, குளம் தூர்வாருதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 457 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வேளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுமித்ரா தேவி என்கிற பெண்ணின் மகன் விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இதையடுத்து சுமித்ராதேவிக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். பின்னர் தண்டுவடம் பாதிப்பால் சிரமமடைந்து வந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் வீல் சேர்களை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லிஏஞ்சலா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story