நீலகிரியில் 46 ரவுடிகள் கைது
நீலகிரியில் 46 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
தமிழகத்தில் `ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்ற பெயரில், ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் குட்கா வழக்கில் தொடர்புடைய 8 பேர், கஞ்சா வழக்கில் 3 பேர், சட்டவிரோத மது விற்பனை வழக்கு சம்பந்தமாக 10 பேர், மேலும் பல்வேறு காரணங்களுக்காக 25 பேர் என மொத்தம் 46 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு உள்ளனர். சிலரிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு உள்ளது. அதை மீறினால் மீண்டும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.