தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 47 வழக்குகளுக்கு தீர்வு
திருவையாறில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 47 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
திருவையாறு;
திருவையாறு கோர்ட்டில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்திரசேகர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹரிராம் முன்னிலை வகித்தார்.தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 881 வழக்குகள் சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் உரிமையியல் வழக்குகள் 21, குற்ற வழக்குகள் 26 உட்பட 47 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.26லட்சத்து5ஆயிரத்து,750 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதில் வக்கீல்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், வக்கீல்கள் ராஜேந்திரன், ராஜராஜ சோழன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு வட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் தேவி மற்றும் தன்னார்வலர் சரளா ஆகியோர் செய்திருந்தனர்.