ரூ.49 லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள்
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மணாங்கோயில் ஊராட்சி கள்ளியூரில் ரூ.17.32 லட்சம் மதிப்பில் பள்ளி வகுப்பறைகள்,ரூ.4.55 லட்சம் மதிப்பில் கழிவறைகள், நாயணத்தியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.1.97 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி, பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சகத்தில் நடைபெறும் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அக்ரஹாகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.98 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிறுபாலம் அமைக்கும் பணி, ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம், 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் புதிய நீர்நிலை உருவாக்கும் பணி, மல்லப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.88 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகள் என மொத்தம் ரூ.49.10 லட்சம் மதிப்பில் நடைப்பெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள்
அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் ஊதியம் சரியாக வழங்குப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் காலதாமதமின்றி உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் ஆகிய கட்டுமான பணி, புதிய நீர்நிலை உருவாக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், உதவி பொறியாளர் சேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.