வக்கீலை கல்லால் தாக்கிய 4 பேர் கைது


வக்கீலை கல்லால் தாக்கிய 4 பேர் கைது
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூர் நெருப்பெரிச்சல் லட்சுமி நகரை சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 34). வக்கீலாக உள்ளார். இவரது உறவினர் கொடிக்கம்பத்தை சேர்ந்த ஜெய்லானி (28). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வ.உ.சி.நகர் கொடிக்கம்பம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இளைஞர்கள் 4 பேர் குடிபோதையில் கெட்டவார்த்தையால் சத்தம் போட்டு பேசியுள்ளனர். இதை 2 பேரும் தட்டிக்கேட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த 4 பேரும் சேர்ந்து கற்களால் முகமது சலீம், ஜெய்லானி ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் 2 பேருக்கும் தலை உடைந்து காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக கருமாரம்பாளையத்தை சேர்ந்த பாண்டியராஜன் (25), என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்த சக்தி சண்முகம் (19), கோல்டன் நகரை சேர்ந்த ராஜகுரு (20), திருப்பூர் காங்கயம் ரோடு ரங்கபாளையத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


Next Story