உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்


உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்
x

கோவில் ஊழியர் கொலை செய்யப்பட்டார். அவருடைய உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுச்சாமி (வயது 55). கோவில் ஊழியரான இவரை கடந்த 15-ந் தேதி கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் மேலச்செவல் பகுதியில் சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவழங்க வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நடந்தது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story