நெல்லை மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தினவிழா வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. எனவே உள்ளூர் விடுமுறை நாளில் நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்.
11-ந் தேதி வேலைநாள்
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.