இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு


இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு
x

இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு 1-ந்தேதி நடக்கிறது.

வேலூர்

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை 4-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் என சுழற்சி வரிசையில் 289 மாணவர்களும், 44 மாணவிகளும் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி, 274.9 முதல் 255 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வு காலை 9.30 மணி அளவில் தொடங்குகிறது. மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து அவற்றை ஒப்படைத்து சரிபார்க்கப்பட்ட பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும் என கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.


Next Story