5 நிலைக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்


5 நிலைக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்
x

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் 5 நிலைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் 5 நிலைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் சுபாஷினி, செயலர் முருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 8 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து கூட்டத்தில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குனரகம் அமைத்துள்ள 5 நிலை குழுதலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நிலைக்குழு

நிலைகுழு உணவு மற்றும் வேளாண்மை குழு தலைவர் கே.ஏ.மச்ச ராஜா, உறுப்பினர்கள் நர்மதா, நாகராஜன், வேல்ராணி என்ற உமா லட்சுமி, தொழில்கள் மற்றும் தொழிலாளர் குழு தலைவர் தமிழ்வாணன், உறுப்பினர்கள் சிவகுமார், பாரதிதாசன், மகாலட்சுமி, பொதுப்பணிகள் குழு தலைவர் போஸ், உறுப்பினர்கள் மகாலட்சுமி, கணேசன், புவனா. கல்வி குழு தலைவர் சுபாஷினி, உறுப்பினர்கள் பாலச்சந்தர், பகவதி, மாலதி, நான்கு குழுக்களிலும் பதவி குழு உறுப்பினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு உள்ளடங்கலாக மக்கள் நல்வாழ்வு மற்றும் நிலைப்பாட்டு குழு தலைவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி, உறுப்பினர்கள் இந்திரா, முத்துச் செல்வி, வேல்முருகன், பாரதிதாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


Related Tags :
Next Story