அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
x

குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு ஆலை மூடல்

சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகள் சிலவற்றை விதிமீறல்கள் என காரணம் காட்டி கடந்த ஆண்டு வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பட்டாசு உற்பத்திக்கு தற்காலிகமாக தடை விதித்தனர்.

இதனால் தற்போது 70-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடிக்கிடக்கிறது.

இந்த ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். சிலர் வேறு பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். சிலர் விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

5 பேர் கைது

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தற்போது விதியை மீறி பட்டாசு தயாரிப்பது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். அப்போது விதிகளை மீறி பேன்சிரக பட்டாசுகளை தயாரித்த ராஜேஸ்வரன் (வயது 24), தங்கமுனியாண்டி (39), சவுந்திரபாண்டியன் (39), செல்வக்குமார் (42), குட்டி (43) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து முழுமையாக தயாரிக்கப்படாத பேன்சிரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

புதிதாக பொறுப்பேறுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் சிவகாசி பகுதிக்கு நேரில் வந்து குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு தயாரிப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story