பேரணாம்பட்டு அம்மா உணவகத்தில் பணிக்கு வராத 5 சமையலர்கள் பணியிடை நீக்கம்


பேரணாம்பட்டு  அம்மா உணவகத்தில் பணிக்கு வராத  5 சமையலர்கள் பணியிடை நீக்கம்
x

பேரணாம்பட்டு அம்மா உணவகத்தில் பணிக்கு வராத 5 சமையலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ேரணாம்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் சுகாதாரமான முறையில் தரமாக சமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணிபுரியும் 12 பணியாளர்களில் 7 பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். சமையல் பணியாளர்கள் முருகம்மா, நளினி, வசந்தி, லட்சுமி, ரம்யா ஆகிய 5 பணியாளர்கள் வரவில்லை. இதனையடுத்து அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பின்னர் பேரணாம்பட்டு டவுன் வீ. கோட்டாரோடு, பஜார் தெரு, ஆம்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் கடைகள் என மொத்தம் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் நகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தார். அவருடன் நகராட்சி துப்புறவு ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சென்றிருந்தனர்.


Next Story