மது குடித்துவிட்டு கோர்ட்டுக்கு வந்தவருக்கு 5 நாள் சிறை
அம்பையில் மது குடித்துவிட்டு கோர்ட்டுக்கு வந்தவருக்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
திருநெல்வேலி
அம்பை:
கடையம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையம் பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், பேச்சிமுத்து ஆகியோர் மது விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அந்த வழக்கில் நேற்று முன்தினம் குற்றவியல் நடுவர் பல்கலை செல்வன் விசாரித்து மது விற்பனை செய்தது தொடர்பாக கைதான இருவருக்கும் தலா ரூ.300 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் வழக்கு தொடர்புடைய பேச்சிமுத்து கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்ததாக தெரிகிறது. உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு பேச்சிமுத்து மது குடித்தது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story