சுகாதார ஆய்வாளர்களுக்கு 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி


சுகாதார ஆய்வாளர்களுக்கு 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி
x

இந்திய ரெயில்வேயில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி திருச்சியில் தொடங்கியது

திருச்சி

திருச்சி, ஜூன்.14-

இந்திய ரெயில்வேயில் உள்ள 16 மண்டலங்கள், 8 உற்பத்தி அலகுகள், ரெயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு மற்றும் கொல்கத்தா மெட்ரோ ஆகியவற்றில் ஏராளமான சுகாதார மற்றும் மலேரியா ஆய்வாளர்கள் பணியற்றி வருகிறார்கள். இந்தநிலையில் இவர்களுக்கான தேசிய அளவில் முதல் புத்தாக்க பயிற்சி திட்டத்தை ரெயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி, வதோராவில் உள்ள இந்திய ரெயில்வே தேசிய அகாடமி மற்றும் தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் ஆகியவை சார்பில் திருச்சியில் உள்ள பல்துறை மண்டல பயிற்சி மையத்தில் இந்த புத்தாக்க பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி வருகிற 17-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 145 ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.சவுந்தரராஜன், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் எஸ்.டி.ராமலிங்கம், இந்திய ரெயில்வே தேசிய அகாடமியின் பேராசிரியர் டாக்டர் கே.வி.கிரீஷ், பல்துறை மண்டல பயிற்சி நிறுவன முதல்வர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story