தமிழ்நாடு பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் 5 பேர் ராஜினாமா


தமிழ்நாடு பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் 5 பேர் ராஜினாமா
x

தமிழ்நாடு பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் 5 பேர் ராஜினாமா செய்தனர்.

சேலம்

கூட்டுறவு சங்கம்

காஞ்சீபுரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்சில்க்) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 21 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவர் தலைவராகவும், மற்றொருவர் துணைத் தலைவராகவும், மீதமுள்ள 19 பேர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தமிழ்நாடு பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த 5 இயக்குனர்கள் நேற்று ராஜினாமா செய்துள்ளனர்.

அதாவது அந்த சங்கத்தில் இயக்குனர்களாக பதவி வகித்து வரும் தர்மபுரி மாவட்ட பட்டு நூற்பு தொழில் சேவை கூட்டுறவு சங்க தலைவர் வெங்கட்ராமன், கோவை மாவட்ட பட்டு நூற்பு தொழில் கூட்டுறவு சங்க தலைவர் துரைசாமி, காஞ்சிபுரம் அசனம்மா பேட்டை ஸ்ரீ ராமநாத ஈஸ்வரர் பருத்தி, பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில் ராஜ்குமார் மற்றும் ஜோதி, அனிதா ஆகியோர் நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர்.

ராஜினாமா

பின்னர் அவர்கள் அங்கிருந்த பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயா ராணியை சந்தித்து தங்களின் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை வழங்கினர். அவர்கள் சொந்த காரணங்களுக்காக இயக்குனர்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர்.

மொத்தம் உள்ள 21 நபர்களில் ஏற்கனவே 7 பேரின் பதவி காலம் முடிந்துவிட்டது. மீதி உள்ள 14 பேரில் தற்போது 5 இயக்குனர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டதால் மீதம் 9 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் தமிழ்நாடு பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story