5 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
ஊட்டியில் கடுங்குளிரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
நீலகிரி
ஊட்டி,
மலைப்பிரதேசமான ஊட்டியில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மாலை, இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுங்குளிருக்கு மத்தியிலும் சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களை போலீசார் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் ஊட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் மற்றும் போலீசார் சாலையோரத்தில் வசித்து வந்த 5 பெண்களை மீட்டு, வாகனத்தில் அழைத்து சென்று ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கடுங்குளிரால் பாதிக்கப்பட்ட சாலையோரத்தில் வசித்த 5 பெண்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்து உள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story