திண்டிவனம் அருகேமினிலாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே மினிலாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம் அைடந்த
திண்டிவனம்,
விக்கிரவாண்டி அடுத்த கடையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது மனைவி மகாலட்சுமி, மகள் கார்த்திகா (11), மகன்கள் ராஜேஷ் (9), மதன்ராஜ் (6) ஆகியோருடன் தனது மொபட்டில் சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, திண்டிவனம் அடுத்த சலவாதி கூட்டு சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த மினிலாரி மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ராஜா உள்பட 5 பேரும் நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் காயமடைந்த ராஜா, மகாலட்சுமி மற்றும் குழந்தைகள் கார்த்திகா, ராஜேஷ், மதன்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற மினிலாரியை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், கண்டறிந்து போலீசார் வாகனத்தை பறிமுதல்செய்தனர். இந்த விபத்து குறித்து ரோசனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.