ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்
x

அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பொது பெட்டியில் இருந்த இரண்டு பைகளை திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரெயில் பெட்டியில் அந்த பை குறித்து விசாரித்த போது அது ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த பூர்ணிமா முகில் (வயது 22), ஜில்லி முகில் (26) ஆகியோரது பை என்பது தெரியவந்தது. பூர்ணிமா முகில் என்பவருடைய பையில் 2 கிலோ கஞ்சாவும், ஜில்லி முகில் பையில் 3 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரிய வந்தது. அதைதையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story