தேக்கு மரம் எனக்கூறி சாதாரண மரத்தை விற்று ரூ.5¼ லட்சம் மோசடி பாதிக்கப்பட்டவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


தேக்கு மரம் எனக்கூறி சாதாரண மரத்தை விற்று ரூ.5¼ லட்சம் மோசடி  பாதிக்கப்பட்டவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 20 Oct 2022 1:00 AM IST (Updated: 20 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

ஈரோடு

தேக்கு மரம் எனக்கூறி சாதாரண மரத்தை விற்று ரூ.5¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகார் மனு

ஈரோடு திண்டல் சக்திநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 48) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தின் பிரிவு 8-ல் புதிதாக வீடு கட்டி வருகிறேன். அதற்கு கதவு, ஜன்னல்களை தேக்கு மரத்தில் செய்வதற்காக முடிவு செய்திருந்தேன். கடந்த ஜூன் மாதம் தச்சு வேலை செய்யும் நபர் ஒருவர் சிவகிரியில் உள்ள மரக்கடைக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு கேரளா தேக்கு மரம் என்று கூறி ஒரு மரத்தை காட்டினார்.

தேக்கு மரம்

அந்த மரத்தின் நிறம் வெள்ளையாக இருந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி கேட்டபோது, ஒரு மாதம் காய வைத்தால் தேக்கு நிறம் வந்துவிடும் என்று கூறினர். எனவே ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். ஆனால் அந்த மரத்தின் நிறம் மாறவே இல்லை. இதனால் வேறுஒரு மரக்கடையில் சென்று விசாரித்தேன். அப்போது அது தேக்கு மரம் இல்லை என்றும், சாதாரண பிரேசில் மரம் என்பதும் தெரியவந்தது. எனவே தேக்கு மரம் என்றுக்கூறி என்னிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story