டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
x

காவலாளியை வாளால் வெட்டி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து கலியாந்தூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்தவுடன் டாஸ்மாக் கடையை அடைத்துவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

டாஸ்மாக் கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தீர்த்தம்(வயது 65) என்பவர் காவல் பணியில் இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் 5 பேர் கும்பல் டாஸ்மாக் கடைக்கு வந்தனர்.

காவலாளிக்கு வெட்டு

திடீரென அந்த கும்பல் காவலாளி தீர்த்த்தை துணியால் கட்டி போட்டனர். அதன்பின்னர் அந்த கும்பல் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ஷட்டரை இரும்பு கம்பி மூலம் நெம்பியுள்ளனர். அப்போது காவலாளி தீர்த்தம் சத்தம் போடவே அங்கு நின்றிருந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த வாளால் காவலாளியை வெட்டினர்.

மதுபாட்டில்கள் கொள்ளை

அதன்பின்னர் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்த அந்த கும்பல் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 2,568 மதுபாட்டில்களை மினிவேனில் ஏற்றி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 31 ஆயிரம் ஆகும். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரை தேடி வருகிறார்கள்.


Next Story