திருச்சியில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5¾ லட்சம் மோசடி


திருச்சியில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5¾ லட்சம் மோசடி
x

திருச்சியில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5¾ லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி

அதிக வட்டி

திருச்சி ரெயில்வே சொசைட்டி காலனி சக்தி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 43). இவர் பகுதி நேர வேலை தேடி வந்தார். இந்த நிலையில் இவருக்கு ஒரு மர்ம ஆசாமி செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.1,000 டெபாசிட் செய்தால் ரூ.300 வட்டியாக வழங்கப்படும். இதனை நீங்கள் பகுதி நேர வேலையாக செய்யலாம் என கூறி உள்ளார். இதையடுத்து, அந்த ஆசாமியின் பேச்சை நம்பிய ஜீவானந்தம் முதலில் 1,000 பணத்தை மர்ம ஆசாமியின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து ஜீவானந்தத்திற்கு வட்டியாக ரூ.300 திருப்பி வழங்கப்பட்டது.

ரூ.5¾ லட்சம் மோசடி

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு பிறகு மீண்டும் போனில் பேசிய மர்ம ஆசாமி நீங்கள் லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தால் உங்களுக்கு நிறைய வட்டி, பரிசுகள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஜீவானந்தம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்தை மர்ம ஆசாமி கூறியபடி ஆன்லைன் மூலம் அவர் அனுப்பிய செல்போன் எண்ணுக்கு அனுப்பி உள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வட்டியும் தரவில்லை அசலையும் தரவில்லை.

இதையடுத்து அந்த மர்ம ஆசாமியின் எண்ணுக்கு போன் செய்தால் அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவானந்தம் இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story