ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவிகள்


ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவிகள்
x

திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர் வெற்றி கொண்டான் சார்பில் ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு கவுன்சிலரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளருமான மு.வெற்றி கொண்டான், பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 லட்சம் மதிப்பில் தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் ஏழை பொது மக்கள் என ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, பேண்ட், சட்டை, மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமால் நகர் கவுன்சிலர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் மு.வெற்றிகொண்டான் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இரா.சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.பாலகிருஷ்ணன், துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வாணியம்பாடி தொகுதி செயலாளர் கோவேந்தன், செய்தி தொடர்பாளர் பார்த்திபன், மாவட்ட இளம் சிறுத்தைகள் பாசறை அமைப்பாளர் கோகுல் அமர்நாத், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஒன்றிய செயலாளர் திருமாவிமல், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர் என்கிற பகலவன், சிவா ரமேஷ், அண்ணாமலை, முகாம் பொறுப்பாளர்கள் முருகன், அரவிந்தன், பிமன், விக்னேஷ், நகர இளைஞரணி விக்கி என்கிற விக்னேஷ், ஊர் நாட்டாண்மை ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் திருப்பதி உள்பட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story