பெண்ணிடம் 5¾ பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5¾ பவுன் சங்கிலி பறிப்பு
x

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5¾ பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் அருகே உள்ள வில்வராயன்பட்டி புதுக் காலனி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மனைவி சூா்யாஸ்ரீ(வயது26). சம்பவத்தன்று சூர்யாஸ்ரீ தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் முன்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர் சூர்யாஸ்ரீ கழுத்தில் அணிந்திருந்த 5¾ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.


Next Story