போலீஸ் மீது கல்வீசி தாக்கியவர் உள்பட மேலும் 5 பேர் கைது
கனியாமூர் கலவர வழக்கு: போலீஸ் மீது கல்வீசி தாக்கியவர் உள்பட மேலும் 5 பேர் கைது
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது வாட்ஸ்அப் குழுவில் வன்முறையை தூண்டும் கருத்துக்களை பதிவிட்டு கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததோடு, கலவரத்தில் கலந்து கொண்ட கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் சிவக்குமார்(வயது 22), எழுத்தூர் கிராமம் ராமதாஸ் மகன் சத்யராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா நத்தகாளி கிராமம் ஏழுமலை மகன் சுந்தர் மற்றும் பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய டி.ஏந்தல் கிராமம் அமிர்தலிங்கம் மகன் முத்தையா(23), போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி, பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய சின்னசேலம் தாலுகா சிறுவத்தூர் கிராமம் சர்புதீன்(45) ஆகிய 5 பேரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.