சூதாடிய 5 பேர் கைது
கூடலூர் அருகே சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி
கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் போலீசார் எல்.எப். ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. போலீசாைர பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கூடலூர் கண்ணகி நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 40), பசும்பொன் நகரை சேர்ந்த முருகன் (52), முத்துக்குமார் (57), தெய்வேந்திரன் (47), லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (38) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.880 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story