கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது
பேரையூர் அருகே கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
பேரையூர்,
சேடபட்டி போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது பேரையூர்-உசிலம்பட்டி சாலையில் உள்ள அயோத்திபட்டி விலக்கு அருகே, உசிலம்பட்டி தாலுகா பொம்மனம்பட்டியை சேர்ந்த வீரணன் (வயது 31), கார்த்திக் (29), அல்லிகுண்டத்தை சேர்ந்த ஜனகராஜ் (27), ஜெயராம் (29), மேக்கிழார்பட்டியைசேர்ந்த ஈஸ்வரன் (28) ஆகியோர் விற்பனை செய்வதற்காக ஆட்டோ ஒன்றில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்த போது, ரோந்து சென்ற போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், ஆட்டோ, மற்றும் ரொக்க பணம் 75 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story