சாராயம் விற்ற 5 பேர் கைது
சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்ற மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை (வயது 38) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, வீட்டின் அருகே சாராயம் விற்ற சேஷசமுத்திரம் சுப்பிரமணி (43), நெடுமானூர் முத்தம்மாள் ( 38), அரசம்பட்டு ரமேஷ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 310 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மேல் சிறுவள்ளூர் (சாத்தனூர்) வலதுபுற கால்வாய் பகுதியில் ரோந்து பணயில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பூங்கான் (51) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.