சாராயம் கடத்திய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது


சாராயம் கடத்திய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
x

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கீழ்வேளூர் அருகே ஆனைமங்கலம் - கோகூர் மெயின் ரோட்டில் மஞ்சவாடி பகுதியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளை மறுத்து அதில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் தப்பி ஓடினர்.

சாராயம் கடத்தல்

உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.பிடிப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சிக்கவலம் ஜீவா நகரைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் சுபாஷ் (வயது 25), தேமங்கலம் காலனி தெருவை சேர்ந்த தங்கையன் மகன் பாலசுப்பிரமணியன் (28), மேலும் 18 வயது சிறுவன் என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது

இதேபோல் ஒர்குடி வெட்டாறு பாலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த சிக்கல் பனை மேடு ஜெயந்தி நகரை சேர்ந்த வெள்ளிநாதன் மகன் ரவீந்தர் (19) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story