சாராயம் விற்ற கணவன், மனைவி உள்பட 5 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற கணவன், மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற கணவன், மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
.நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம், வடக்காலத்தூர், சிக்கல் பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
5 பேர் கைது
அப்போது ராதாமங்கலம் ஊராட்சி தெற்காலத்தூர் பகுதியில் சாராயம் விற்ற காலனி தெருவை சேர்ந்த சேர்ந்த தங்கையன் மனைவி சாரதா (வயது 65), வடக்காலத்தூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் அருகே சாராயம் விற்ற மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் (56), புதுச்சேரி ஊராட்சி விக்னாபுரம் பகுதியில் சாராயம் விற்ற மேலத்தெருவை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் சரவணன்(34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சிக்கல் ஊராட்சி பனைமேடு கீழத்தெரு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த செந்தில் (49), அவரது மனைவி வாசுகி (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் வீதம் 550 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.