தெருநாய் கடித்து ெபண் உள்பட 5 பேர் படுகாயம்


தெருநாய் கடித்து ெபண் உள்பட 5 பேர் படுகாயம்
x

அருப்புக்கோட்டையில் ெதருநாய் கடித்து மூதாட்டி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் ெதருநாய் கடித்து மூதாட்டி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

5 பேரை கடித்தது

அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் பலர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்தநிலையில் மணிநகரம் பகுதியில் வெறி பிடித்த தெரு நாய் ஒன்று அப்பகுதியில் செல்பவர்களை விரட்டி, விரட்டி கடித்தது. இதில் பாப்பாம்மாள் (வயது 70), சுரேஷ் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தெரு நாய்களை பிடித்து அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story