தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் படுகாயம்


தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்

தென்காசி

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி தனியார் கல்லூரியில் அம்மன்குளம் பகுதியை சேர்ந்த முகேஷ், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த முகம்மது ரியாஸ், அரவிந்தன் ஆகியோர் படித்து வருகின்றனர். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்றனர்.

அப்போது முள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசி்ரியையாக பணிபுரியும் மணிச்செல்வி (50), அவரது மகன் அபிலேஷ் ஆகிய இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

புளியங்குடி சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வந்தபோது இரு மோட்டார்சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் மணி்ச்செல்வி, அபிலேஷ், அரவிந்தன், முகேஷ், முகம்மதுரியாஸ் ஆகிய 5 பேரூம் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து 5 பேரும் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story