சாராயம் விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே கோவில் கடம்பனூர், சிக்கல், தேவூர் பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் கடம்பனூர் சன்னதி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (வயது 29), சிக்கல் அய்யனார் கோவில் தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜெயவீரபாண்டியன் மனைவி முனீஸ்வரி (32), ராதாமங்கலம் ஊராட்சி தெற்காலத்தூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற இரட்டை மதகடி பகுதியை சேர்ந்த அன்வர் உசேன் (42), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் தேவூர் அரசினர் விடுதி அருகே சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த மனோகரன் மனைவி லதா (48), செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முருகன் (56) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story