கோஷ்டி மோதலில் 5 பேர் காயம்


தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே கோஷ்டி மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

தட்டார் மடம்:

தட்டார் மடம் அருகே யுள்ள காந்திபுரி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் நீலகண்டன் (வயது 29). இவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள கடாமுனீஸ்வரர் கோவிலுக்கு வரி செலுத்துவது தொடர்பாக நீலகண்டன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த ஜெயக்கொடி மகன் செல்வக்குமார் ஆகியோர் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 31-ந்தேதி அங்குள்ள கோவில் அருகே நின்று கொண்டு இருந்த செல்வகுமார், சுப்பு என்ற சுப்பிரமணியன், சூரியா, அவரது சகோதரர் சுதாகர், சுந்தரேசன் ஆகியோர் வரிகொடுக்காதவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை நீலகண்டன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் உள்ளிட்ட 5 பேரும் அவரை தாக்கினர். அப்போது தடுக்க முயன்ற அவரது மனைவி அகஸ்டாவை மது்பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து செல்வகுமார், சுப்பு என்ற சுப்பிரமணியன் ஆகியோரை எதிர்தரப்பை சேர்ந்த நீலகண்டன், சதாசிவம் (25), ராஜன் என்றராஜி, பாலபாபு (41) ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கந்தன் மனைவி சந்தனமாரி (40), அவரது மகன்சூரியா, முருகன் மகன் சுரேஷ் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இந்தமோதலில் சந்தனமாரி, நீலகண்டன் உள்ளிட்ட இருதரப்பை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் இருதரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story