உடும்பை வேட்டையாடி சாப்பிட்ட 5 பேர் கைது
உடும்பை வேட்டையாடி சாப்பிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வன வெளிப்பகுதியான கோடாரங்குளம் பகுதியில் சிலர் உடும்பு வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாபநாசம் வனவர் ஜெகன், வனக்காப்பாளர்கள் செல்வம், காருண்யா, வனப்பாதுகாவலர் சாந்தா ஆகியோர் சென்று கோடாரங்குளம் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 37), ராஜ்குமார் (41), நாராயணன் (45), சுடலைமுத்து (59), ஆனந்த் (27) ஆகிய ஐந்து பேர் உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது. இதையடுத்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்ரியா உத்தரவின் பேரில் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
Related Tags :
Next Story