மது விற்ற 5 பேர் கைது
மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கந்தம்பாளையம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அசோக் குமார், தளவாபாளையம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் தோகைமலை பகுதியில் வேங்கடதாம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 70) தனது வீட்டின் பின்புறமும், ஆலத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் (50) பெட்டிக்கடையிலும், காவல்காரன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (66) டாஸ்மாக் பின்புறமும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story