தூத்துக்குடியில் மதுவிற்ற 5 பேர் கைது
தூத்துக்குடியில் மதுவிற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மீலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் யாரேனும் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்கிறார்களா என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மட்டக்கடை, பூப்பாண்டியாபுரம், டேவிஸ்புரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 714 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாளமுத்துநகர், வடபாகம், தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story