சென்னையில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேர் கைது


சென்னையில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேர் கைது
x

சென்னை பல்லாவரம் அருகே போதை பொருள் விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே ஹெராயின் போதை பொருள் விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். நாகல்கேணி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக தங்கி இருப்பதாகவும், அவர் போதை பொருள் பயன்படுத்துவதாக சங்கர் நகர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஷேக் அஸ்மத், என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 48 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர்.


Next Story