மது பாட்டில், சாராயம் விற்ற 5 பேர் கைது


மது பாட்டில், சாராயம் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் பகுதியில் மது பாட்டில், சாராயம் விற்ற 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சைமன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் மதுபாட்டில்களை பதுக்கி வைத்த கிருஷ்ணன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் தலைமையிலான போலீசார் எஸ்.வி.பாளையம், விரியூர், சேஷசமுத்திரம் பகுதிகளில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது 57), விரியூர் இருதயராஜ்(37), சேஷசமுத்திரம் சக்திவேல்(39) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story