புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

புன்னம்சத்திரம் பகுதியில் மளிகை கடைகளில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, புன்னம் சத்திரம் பகுதியில் ராமசாமி, காந்தி நகர் பகுதியில் அபராபேகம், நாணப்பரப்பு பகுதியில் சிவசாமி, புகழூர் நான்கு ரோடு பகுதியில் இளங்கோவன் ஆகிய 4 பேரும் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டிைய ேசா்ந்தவர் ராஜலிங்கம் (வயது38). இவா் காவல்காரன் பட்டி சந்தை அருகே தனது கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


Next Story