தலைவாசல் அருகேமோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 5 பேர் கைது600 லிட்டர் பறிமுதல்


தலைவாசல் அருகேமோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 5 பேர் கைது600 லிட்டர் பறிமுதல்
x

தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 600 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்

தலைவாசல்,

போலீசார் ரோந்து

ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தலைவாசலை அடுத்த கவர்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி (வயது 32) என்பதும், அதேபோல் ராமசேஷபுரத்தை சேர்ந்த சேகர் (39), பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா மங்களூரை சேர்ந்த செல்வம் (32), மணி விழுந்தான் காலனியை சேர்ந்த லோகநாதன் (62) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 420 லிட்டர் சாராயம் மற்றும் 4 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாரி டியூப்பில்...

அதேபோல் தலைவாசலை அடுத்து வெள்ளையூர் பகுதியில் வீரகனூர் சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 6 லாரி டியூப்பில ்180 லிட்டர் சாராயம் மோட்டார் சைக்கிளில் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வீரகனூர் அருகே வீ.ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்பவர் மீது வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story