மணல் அள்ளிய 5 பேர் கைது


மணல் அள்ளிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ளிய 5 பேர் கைது

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது47). இவருக்கு சொந்தமான வன்னிவயல் பாலம் அருகே உள்ள பட்டா நிலத்தில் சிலர் மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்து காளிமுத்து தனது ஊர்க்காரர்களை அழைத்து கொண்டு அங்கு சென்றுள்ளார். அவரை பார்த்ததும் ஆர்.காவனூர் குமரேசன் (35) என்பவர் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அங்கு நின்ற ஆசாரி மடம் ரஞ்சித்குமார் (20), சிவகங்கை வி.புதுப்பட்டியை சேர்ந்த பூப்பாண்டி (23), பூபதி (27), சரத்குமார் (25), பார்த்திபன் (27) ஆகியோரை மடக்கி பிடித்து மணல் அள்ள பயன்படுத்திய லாரி மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய குமரேசனை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story