கதண்டுகள் கடித்து 5 பேர் காயம்


கதண்டுகள் கடித்து 5 பேர் காயம்
x

கறம்பக்குடி அருகே கதண்டுகள் கடித்து 5 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி செட்டித்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). கருப்பகோன் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர்கள் 2 பேரும் வெட்டன் விடுதியில் இருந்து சூரக்காட்டிற்கு தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மறவன்பட்டி அருகே சென்றபோது திடீரென சாலையில் கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள் 2 பேரையும் கடித்தன. இதில் நிலைத்தடுமாறிய இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இருப்பினும் கதண்டுகள் அவர்களை கடித்தது. இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துவந்து ஊற்றினர். அப்போது மறவன்பட்டி கிராமத்தை சேர்ந்த மேலும் 3 பேரை கதண்டுகள் கடித்தன.

இதில் சுப்பிரமணியன், நாகராஜ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரும் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் சுப்பிரமணியன் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். லேசான காயம் அடைந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கதண்டுகள் கடித்து 5 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story