வலை நிறுவனத்தில் திருடிய 5 பேர் சிக்கினர்


வலை நிறுவனத்தில் திருடிய 5 பேர் சிக்கினர்
x

திசையன்விளையில் வலை நிறுவனத்தில் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை-இடையன்குடி ரோட்டில் வலை நிறுவனம் ஒன்று உள்ளது. அங்கு 4 மின்மோட்டார்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்பட ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக அந்த நிறுவன மேலாளர் சசிக்குமார் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, இந்த வழக்கு தொடர்பாக திசையன்விளை இந்திராநகர் நடுத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 20), இடைச்சிவிளை ஆலந்தேரிவிளையை சேர்ந்த சேர்மமகராஜன் (46) மற்றும் 18 வயது வாலிபர், 17 வயதுடைய 2 சிறுவர்கள் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டன.


Next Story