வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
x
திருப்பூர்


திருப்பூர் மாநகர பகுதியில் தொடர்வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வழிப்பறி

திருப்பூர், நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. நல்லூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் ரோந்து பணி ஈடுபட்டு வந்தனர். மணியக்காரன் பாளையம் பகுதியில் ரோந்து ெசன்ற போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில வந்த 5 பேரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கைது

விசாரணையில் அவர்கள் சத்யா காலனி பகுதியை சேர்ந்த சுலைமான் மகன் சைநுதீன் (வயது 20), சம்சுதீன் மகன் முஜிபுர் ரஹ்மான் (22), ஜாபர் அலி மகன் யாசர் அலி (22), ரகுமான் மகன் அப்பாஸ் (19), ரபியுதீன் (22) என ெதரியவந்தது. இவர்கள் அனைவரும் தொடர் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதாக கூறியதை தெதாடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story