5 சதவீதம் ஊக்கத்தொகை:வரி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
5 சதவீதம் ஊக்கத்தொகை என மாநகராட்சி அறிவித்ததால் நேற்று வரி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டினா்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ஈரோடு மாநகரின் முக்கிய பகுதிகளான பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், சூரம்பட்டி நால்ரோடு, சத்தி ரோடு, வ.உ.சி. பூங்கா, மூலப்பட்டறை, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் வரி செலுத்த ஆர்வம் காட்டினர். அதன்படி ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், சம்பத்நகர், பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வரி வசூல் மையம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வரி செலுத்தினர். நேற்று வரி வசூல் எவ்வளவு நடந்து என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது யாரும் அதுகுறித்து தகவல் தெரிக்கவில்லை.