பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x

கே.வி.குப்பம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

கே.வி.குப்பம் தாலுகா காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மனைவி லைலா (வயது 54). இவர் கங்கையம்மன் கோவில் அருகில் உள்ள மேட்டுக்கொல்லையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது முககவசம் அணிந்து வந்த 2 வாலிபர்கள் ஏதோ விசாரிப்பது போல் பேசி அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

உடனே லைலா கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு வந்த பொதுமக்கள், மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து விரட்டினர். ஆனால் மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இது குறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப் பதிவு செய்து, மர்ம ஆசாமிகளைத் தேடி வருகிறார்.


Next Story