திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே கஞ்சனூரை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி திவ்யா (வயது 23). இவர் பனப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது தாய் விட்டுக்கு சென்றார். சாப்பிட்டு விட்டு வீட்டில் குடும்பத்தினருடன் திவ்யா படுத்து தூங்கினார். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், திவ்யா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் திவ்யாவி்ன் குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க கதவை பூட்டாமல் தூங்கியுள்ளனர். இதை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் பின்புற வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

வலைவீச்சு

பின்னர் அவர் திவ்யா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story