வாலிபரை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
பாளையங்கோட்டையில் வாலிபரை தாக்கி 5 பவுன் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை சேர்ந்த முருகன் மகன் சிவசரவணகுமார் (வயது 28). இவர் கே.டி.சி. நகரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து சிவசரவணகுமார் கங்கைகொண்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை பொட்டல் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த சிவசரவணகுமார் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story