வீட்டில் 5½ பவுன் நகை- பணம் திருட்டு


வீட்டில் 5½ பவுன் நகை- பணம் திருட்டு
x

வீட்டில் 5½ பவுன் நகை- பணம் திருட்டுபோனது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியம்(வயது 61). சம்பவதன்று இவரது அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாததால், வீட்டை பூட்டிவிட்டு அவரை பார்க்க அவரது மருமகள்களுடன் சேர்ந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மாலையில் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து பீரோவில் பார்த்தபோது நெக்லஸ், தோடு, மோதிரம் என மொத்தம் 5½ பவுன் நகை மற்றும் ரூ.6,500 ரொக்கம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கீழப்பழுவூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story